கிருஷ்ணகிரி

அங்கன்வாடி மையம்  புதுப்பிக்கப்படுமா?

DIN


வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியம் பந்திகுறி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பந்திகுறி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பழைய கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மைத்தில் இரும்பு கம்பியால் செய்யப்பட்ட சன்னல், கடந்த மாதம் வீசிய காற்றில் சேதம் அடைந்தது.
மேலும், மழை பெய்யும் போது, மழைநீர் அங்கன்வாடி மையத்தில் தேக்கமடைகிறது. இதனால், குழந்தைகள் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால், பெற்றோர், குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். குழந்தைகளின் நலன் கருதி பழுதடைந்துள்ள நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT