கிருஷ்ணகிரி

கராத்தே போட்டி: ஒசூர் மாணவர் சாதனை

DIN


கராத்தே விளையாட்டுப் போட்டியில் ஒசூர் மாணவர் வெற்றி பெற்று வெண்கலம் பரிசு பெற்றார்.
அகில இந்திய அளவில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் 17 -ஆவது கராத்தே போட்டிகள் அக். 13, 14 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இப் போட்டிகளில் தமிழ்நாடு, கேரளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், தில்லி, ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தியாகராஜன், கனகராஜ் ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. இதில் கட்டா மற்றும் சண்டைப் பிரிவு போட்டியில் ஒசூர் அசோக் லேலண்ட் பள்ளி மாணவர் ஜெயசுகின் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். அவருக்கு பயிற்சியாளர் மோகன்குமார் வாழ்த்துத் தெரிவித்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT