கிருஷ்ணகிரி

தீயணைப்பு மீட்புப் பணிகள்நிலையக் கட்டடம் திறப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இதையொட்டி தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். 
இதில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் வேலு, துணை அலுவலர் தேவராஜ், தேன்கனிக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் ஜெயராமன், கெலமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பாலக்கோட்டில்...
பாலக்கோடு ஓன்றியத்துக்குள்பட்ட கடமடை ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர்  பன்னீர் செல்வம் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில், பாலக்கோடு வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT