கிருஷ்ணகிரி

அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பமிடக் கோரி மனு அளிப்பு

DIN

அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் எனக் கோரி, மக்கள் பாதை அமைப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்  கூட்டத்தில் மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் சமூக மாற்றத்துக்காக செயல்பட்டு வரும் அமைப்பாக மக்கள் பாதை அமைப்பு உள்ளது.  தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவரும், தங்களின் பெயரையும்,  முன்னெழுத்தையும் தமிழ்மொழியிலேயே இட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 
அரசுப் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை மதிக்காத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. எனவே, இனி அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள்,  கடிதங்கள், ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைய ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT