கிருஷ்ணகிரி

மாட்டு பொங்கல் விழா

DIN

போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழாவை பட்டிப்பொங்கல் எனவும் கிராமங்களில் அழைக்கின்றனர். விளை நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே இடத்தில் புது பானையில் பொங்கலிட்டும், கால்நடைகளுக்கு குளிப்பாட்டி சுத்தம் செய்து, அலங்கரித்தும், வர்ணம் பூசி அழைத்து வந்தனர்.
பின்னர், பொங்கல் வைத்து மாடு, ஆடு உள்ளிட்டவைக்கு பூஜைகள் செய்தனர். அங்கிருந்து கால்நடைகளை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜைகள் செய்து, மாடுகள் விடும் விழா நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT