கிருஷ்ணகிரி

தேவிரஅள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி

DIN


போச்சம்பள்ளியை அடுத்த தேவீர அள்ளி அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் தேவீர அள்ளியில் நடுநிலைப் பள்ளியாக இருந்த அரசு பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு இதுவரை கூடுதல் கட்டடம் வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் திறந்த வெளியில் மரத்தின் நிழலில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT