கிருஷ்ணகிரி

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

DIN

சிப்காட் அமைக்க  நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம்,  குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  பொது மக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி சுப்பிரமணி தலைமையில்,  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை  மனுவின் விவரம்:  குருபரப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  மூன்று தலைமுறைகளாக கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள நிலங்களைச் சமன்படுத்தி  ராகி, நெல், அவரை, துவரை போன்ற பயிர்களையும்,  மா,  தென்னை, தேக்கு போன்ற மரங்களையும் வளர்த்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களைத் தவிர  வேறு வருவாய்
கிடையாது.
தற்போது,  அரசானது,  இந்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க  திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். அவ்வாறு, விளைநிலங்களை கையகப்படுத்தினால்,  பல குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டி இருக்கும். எனவே, எங்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT