கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

DIN

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி அணையின் நீர் மட்டம் 52 அடியாகும். ஜூன் 12-ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்வரத்தானது வினாடிக்கு 257 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு வினாடிக்கு 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அணையில் செயல்படும் பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகளுடான ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, முதல் போக சாகுபடிக்கு, கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசன நீர் திறந்தவிடப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், அணையின் மதகுகளை மாற்றி அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஜூலை 5-ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT