கிருஷ்ணகிரி

கொல்ரூர் வரசித்தி விநாயகர், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

பர்கூர் அருகே உள்ள கொல்ரூர் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஜெகதேவியை அடுத்த கொல்ரூர் கிராமத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கணபதி ஹோம், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோம், கோபுர கலச ஹோமம், பூர்ணாஹுதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கோபுர கலசத்துக்கு மங்கள வாத்தியம், முழங்க புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா
கும்பாபிஷேகம் நடைபெற்றது.  
தொடர்ந்து, வரசித்தி விநாயகர், மாரியம்மன் திரு உருவச் சிலைகளுக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்குமம் அபிஷேகம் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT