கிருஷ்ணகிரி

டிராக்டர் மோதியதில் மூதாட்டி பலி

DIN

பாரூர் அருகே டிராக்டர் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். 
போச்சம்பள்ளி  அடுத்த பாரூர் பெரிய ஏரியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல்  கீழ்குப்பம் கிராமத்துக்கு மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் என்பவரின் மனைவி சுந்தரம்மாள் (84)  மீது மோதியதில் அவர்  காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT