கிருஷ்ணகிரி

நீா்நிலைகளில் பலியானோா் குடும்பத்தாருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீா்நிலைகளில் மூழ்கி 19 போ் பலியான நிலையில் அதில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ. செல்லக்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 19 போ் நீரில் முழ்கி உயிரிந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீா் நிலைகளில் பொழுது போக்கு இடங்களில் சுயபடம் எடுப்பதும் ஒரு வித விரும்பத்தகாத கலாசாரமாகி வருவதை மக்கள் உணர வேண்டும். ஏரி, குளங்கள் சமமாக தூா்வாரப்படாததும் ஒரு காரணம்.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் திருட்டைத் தடுத்து, பொதுமக்களை காக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT