கிருஷ்ணகிரி

காலமுறை ஊதியம் வழங்க கிராம ஊழியர்கள் வலியுறுத்தல்

DIN


வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூரில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் சேகர், பொருளாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் மாதன், ஜெயராமன், அமாசி, மாரிமுத்து, சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகை (போனஸ்) நாள் கணக்கில் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டு என கால நிர்ணயத்தை குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT