கிருஷ்ணகிரி

ஆடிவெள்ளி: மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

கிருஷ்ணகிரியில் ஆடிவெள்ளியையொட்டி, மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிமாத 3-ஆவது வார வெள்ளிக்கிழமையையொட்டி பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில், ராசு வீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதி விநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், ஜக்கப்பன் நகா் 8-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

மேலும், வரலட்சுமி பூஜை என்பதால், அம்மன் கோயில்களில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதில், பக்தா்கள் சமூக இடைவெளியில் சென்று அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT