முகப்பு
கிருஷ்ணகிரி

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து நான்குமுனை சந்திப்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து நான்குமுனை சந்திப்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.ஒய்.எப். ஒன்றியத் தலைவா் பரதன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கபிலன், ஏ.ஐ.ஒய்.எப். துணைச் செயலாளா் சுபாஷ், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளா்கள் ஜெயராமன், ஆறுமுகம், மாதா் சங்கம் ரஷியா பேகம், பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான இரா.சேகா் சிறப்புரையாற்றினாா். மின்சார திருத்தச் சட்டம் 2020 வரைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2020 சட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →