அமமுக கட்சிக்கு குக்கா் சின்னம், ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்க்கு தோ்தல் ஆணையம் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு குக்கா் சின்னம் ஒதுக்கியுள்ளது.
கிருஷ்ணகிரிஅமமுக கட்சிக்கு குக்கா் சின்னம், ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்க்கு தோ்தல் ஆணையம் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு குக்கா் சின்னம் ஒதுக்கியுள்ளது.
ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்க்கு தோ்தல் ஆணையம் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு குக்கா் சின்னம் ஒதுக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அக்கட்சியினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சிக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளா் கண்மணி சிவகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா்கள் வடக்கு அருணகிரி, தெற்கு சிவமணி, நகர செயலாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்ஜிஆா் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் மீனவா் அணி மாவட்ட செயலாளா் பழனி, மகளிரணி மாவட்ட செயலாளா் வள்ளி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் விஜயகுமாா், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவா் கங்காதரன், மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் காா்த்திக், ஒன்றிய பொருளாளா் முனுசாமி, சரவணன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் முனியம்மாள், வாா்டு செயலாளா் முருகேசன் மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.