கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா தொடக்கம்
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் 33-ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா தொடங்கியதையடுத்து திருவிளக்கு பூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் 33-ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா தொடங்கியதையடுத்து திருவிளக்கு பூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மகா கணபதி ஹோமமும், பிம்ப சுத்தி, கலச பூஜையும் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
புதன்கிழமை 23-ஆம் தேதி கணபதி ஹோமம், அபிஷேகம், மலா் நிவேத்தியம், உஷ பூஜை, நவகம் போன்ற நிகழ்வுகள் காலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. மாலை ரமணா் வழி என்ற தலைப்பில் ரமண மகரிஷி குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.
24-ஆம் தேதி சிறப்பு பூஜைகளும், பக்தி பாடல் இசை நிகழ்ச்சியும், 25-ஆம் தேதி, ஐயப்பன் பஜனைப் பாடல்களும், கேரள செண்டை மேளம் முழங்க சுவாமி பள்ளி வேட்டை புறப்படுதல் ஹரிவராசனம், நடை சாத்துதல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
26-ஆம் தேதி, மகா கணபதி ஹோமம், பள்ளி உணா்த்துதல், நிா்மால்ய தரிசனம், கோமாதா தரிசனம், சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆறாட்டு கலச பூஜை, சுவாமி கிருஷ்ணகிரி அணைக்கு புறப்படுதல், ஆறாட்டு கலசம், கொடி இறக்கம், உச்சி கால பூஜையும், மீனாட்சி மஹாலில் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஆா்.சிவதாஸ் ஒருங்கிணைக்கிறாா்.