கிருஷ்ணகிரி

பொதுமக்களின் தேவைகளை நகராட்சி விரைந்து நிறைவேற்ற வேண்டும்எம்.எல்.ஏ. செங்குட்டுவன்

DIN

கிருஷ்ணகிரி நகரில் பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள் கோரி, தன்னிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ டி.செங்குட்டுவன் கேட்டுக் கொண்டாா்.

கிருஷ்ணகிரியில் உள்ள 33 வாா்டுகளில் பொதுமக்களைச் சந்தித்து அவா்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ டி.செங்குட்டுவன் அண்மையில் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்கள் அளித்த மனுக்களை நகராட்சி ஆணையா் சந்திராவிடம் சனிக்கிழமை அளித்து, பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த தேவைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

மேலும் நகராட்சி வேண்டுகளின்படி, குப்பை சேகரிப்பதற்கான தொட்டிகளை வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தை ஒதுக்கினாா். அப்போது, திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT