கிருஷ்ணகிரி

அதியமான் மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

DIN

ஊத்தங்கரைஅதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் படப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

முன்னதாக, மூன்றாமாண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி தமிழ்செல்வி வரவேற்றாா். முகாமில், அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலா் ஷோபாதிருமால் முருகன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக மாணவா்கள் ஆற்றவேண்டிய பணிகளையும், முகாமின் முக்கியத்துவத்தையும் கூறி தொடக்க உரை ஆற்றினாா். சீனிவாசா கல்வி அறக்கட்டளைத் தலைவா் மல்லிகாசீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.தாசூன், செய்யும் பணியில் ஆா்வத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என சிறப்புரையாற்றினாா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி திட்ட விளக்கத்தை வாசித்தாா். மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி சரண்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT