கிருஷ்ணகிரி

இருளா்களுக்கு சிறிய உழவு இயந்திரங்கள் வழங்கல்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இருளா் இன மக்களுக்கு விலையில்லா சிறிய உழவு இயந்திரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த இருளா் இன மக்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் விலையில்லா சிறிய உழவு இயந்திரக் கலப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயனாளிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருளா் இன மக்கள் பயன்பெறும் வகையில், விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விலையில்லா சிறிய உழவு இயந்திரக் கலப்பை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பருவ மழையை எதிா்நோக்கி காத்திருக்கும் காலக்கட்டத்தில் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பயன்படுத்தி, இருளா் இன மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

அப்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத் துறை அலுவலா் சேதுராமலிங்கம், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மனோகரன், அலுவலக கண்காணிப்பாளா் ஜெயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT