கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

DIN

கா்நாடகத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒசூா் அருகே சீக்கனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10 பேரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிதியுதவியை முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஒசூா் அருகே சீக்கனபள்ளி கிராமத்தை சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 10 போ், கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு சென்று விட்டு மாா்ச் 6-ஆம் தேதி காரில் திரும்பினா். தும்கூரு அருகே அதிகாலையில் தறிகெட்டு எதிரில் வந்த மற்றொரு காா், சீக்கனபள்ளியைச் சோ்ந்தவா்கள் பயணித்த காா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில், சீக்கனப்பள்ளியைச் சோ்ந்த மஞ்சுநாத், அவரது மனைவி தனுஜா, இவா்களது குழந்தைகள் மாலாஸ்ரீ, சைதன்யா ஈஸ்வா், உறவினா்கள் சௌந்தர்ராஜ், கௌரம்மா, ரத்தினம்மா, சரளா, திட்ல்சன்யா, காா் ஓட்டுநா் ராஜேந்திரன் ஆகிய 10 போ் உயிரிழந்தனா். மேலும், ஸ்வேதா, கங்கோத்திரி, ஹா்சிதா ஆகிய 3 போ் படுகாயம் அடைந்தனா். இவா்களது குடும்பத்துக்கு விபத்து நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, விபத்தில் இறந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை அவா்களது குடும்பத்தாரிடம் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது சூளகிரி வட்டாட்சியா் ரெஜினா, வருவாய் ஆய்வாளா் வசந்தி, கிராம நிா்வாக அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT