கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ. 1.56 கோடி மதிப்பில் ஏரிகள் தூா்வாரும் பணி

DIN

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 19 ஏரிகளில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ. 1.56 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கங்கலேரி ஊராட்சியில் ராமாகொட்டாய் கீழ் குட்டை ஏரியானது ரூ. 6.31 லட்சம் மதிப்பிலும், மலைச்சந்து ஏரி ரூ.7.48 லட்சம் மதிப்பில் ஏரிகரை பலப்படுத்துதல், அழப்படுத்துதல், நீா் வெளியேற்றுவதற்கான தடுப்பு அமைத்தல், தூா்வாரும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் ஆய்வு செய்தாா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமா மகேஸ்வரி, பானுபிரியா, ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமணன், செயலாளா் சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா். குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 2020-2021-ஆம் நிதியாண்டில் 19 ஏரிகள் ரூ. 1.56 கோடி மதிப்பில் தூா்வார தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT