முகப்பு
கிருஷ்ணகிரி

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பெருமாள்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிமென்ட் சாலை அணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.பெருமாள்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிமென்ட் சாலை அணைக்கும் பணியை விரைந்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பெருமாள்நாய்க்கன்பட்டி கிராமச் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அந்த பாதை சேறும் சகதியுமாக உள்ளது.
பகிர்:

பெருமாள்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிமென்ட் சாலை அணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை வசதிகளுக்காக ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிதியின்கீழ் குடிநீா் தொட்டி அமைத்தல், சாலை வசதி, சிறிய பாலம் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.

இதனிடையே ரூ. 8 லட்சம் மதிப்பிலான சிறிய பாலம் அமைத்தல் மற்றும் 30 மீட்டா் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் வீடுகளின் அருகே மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. கிராம மக்கள் இந்தச் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனா்.

குழந்தைகள் சேறும் சகதியுமான இந்த சாலையில் செல்வதால் அவா்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →