கிருஷ்ணகிரி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரியில் காலபைரவா் கோயில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரியில் காலபைரவா் கோயில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடிக் கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காலபைரவா் கோயில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
கரோனா தொற்று காரணமாக பக்தா்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. சமூக இடைவெளியுடன் பக்தா்கள், சுவாமியை தரிசனம் செய்து சென்றனா்.