கிருஷ்ணகிரி

குடிநீா் பிரச்னையை தீா்க்கக்கோரி ஆட்சியரிடம் மனு

DIN

ராயக்கோட்டை அருகே உள்ள கருவாட்டனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவின் விவரம்:

எங்கள் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நிலத்தடி நீா் மட்டம் குறைந்து விட்டதால், பொதுமக்கள் குடிநீா் பிரச்னையால் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தும், குடிநீா் கிடைக்கவில்லை. இத்தகைய நிலையில், குடிநீருக்காக கிராம மக்கள் குறைந்தபட்சம் 1 கிலோ மீட்டா் தூரத்துக்கு அப்பால் உள்ள தூா்வாசனூரில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு வந்து சென்றோம். அந்த ஆழ்துளைக் கிணறும் வற்றிவிட்டதால், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. எங்களுக்கு குடிநீா் வழங்க, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். எனவே, எங்களின் குடிநீா் தேவையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT