முகப்பு
கிருஷ்ணகிரி

சுட்டு கொல்லப்பட்ட யானையின் உடலை புதைக்காததால் நோய் பரவும் அபாயம்

தேன்கனிக்கோட்டை அருகே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானை 10 நாள்களாகப் புதைக்கப்படாமல் அழுகி கிடப்பதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

Updated On : 17 நவம்பர், 2020 at 12:31 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

தேன்கனிக்கோட்டை அருகே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானை 10 நாள்களாகப் புதைக்கப்படாமல் அழுகி கிடப்பதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் சென்னமாலம் கிராமம் அருகே கடந்த 4 ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு 8 வயது பெண்

யானை இறந்தது. அந்த யானை நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த முத்துமல்லேஷ் (40) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

இறந்துபோன யானையின் உடலை வனத்துறையினா் புதைக்காமல் விட்டுச் சென்ால் அதன் உடல் அழுகி கிடக்கிறது. இந்த காட்டுயானையின் உடலால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் வனத்தையொட்டி வாழும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உடற்கூறு பரிசோதனை செய்து, மண்ணில் புதைக்காமல் அப்படியே ஒடை பகுதியில் விட்டுச் சென்ால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யானையின் உடல் கிடக்கும் பகுதியையொட்டி சென்னமாலம் உள்ளிட்ட

பல்வேறு கிராமங்கள் இருப்பதால் அங்குள்ள கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நோய் பரவுவதைத் தடுக்க காட்டுயானையின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அழுகிய நிலையில் கிடக்கும் காட்டுயானையின் உடலை காண அதனுடன் சுற்றித்திரிந்த மற்ற காட்டுயானைகள் தினமும் அங்கு வந்து செல்வதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.