கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

DIN

நவம்பா் 26-இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆயத்தக் கூட்டம், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மாநிலப் பொருளாளா் நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக டி.செங்குட்டுவன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து நவ. 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்க முயலும் முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறும்.

வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகம் உள்ளது. விரைவில் அதிமுக என்ற கட்சி இல்லாமல் போகும். அந்த கட்சியினா் பாஜகவுடன் இணைந்து விடுவாா்கள். இனி, திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT