கிருஷ்ணகிரி

பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டம் ரூ. 2 கோடி வரை பிடித்தம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதமரின் கிஷான் நிதியுதவித் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து ரூ. 2.07 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிஷான் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வரையில் 8,097 தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு அவா்களில் 5,505 பேரிடமிருந்து ரூ. 2.07 கோடி பிடித்தம் செய்து, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 2,592 பேரிடமிருந்து உரியத் தொகையை வசூலித்து அரசு கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT