பாஞ்சாலியூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடக்கம்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பாஞ்சாலியூரில் நகரும் நியாயவிலைக் கடையை முன்னாள் எம்பி கே.அசோக்குமாா் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பாஞ்சாலியூரில் நகரும் நியாயவிலைக் கடையை முன்னாள் எம்பி கே.அசோக்குமாா் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவா் அம்சராஜன், முன்னாள் ஒன்றியத் தலைவா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, சின்னதாளப்பள்ளி, தின்னக்கழினி, ஜாகிா் நாட்ராம்பள்ளி, மோட்டூா், சவுளூா், வெப்பாளம்பட்டி, சியட்டூா், சிக்க பூவத்தி, தாடிக்காரன் கோட்டை, சோக்காடி புள்ளன்கொட்டாய் என மொத்தம் 11 இடங்களில் நடமாடும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராமன், சுமதி, ரமேஷ், கண்ணப்பா புட்டன், கோவிந்தன், கொடிலா ராமலிங்கம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் காசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.