முகப்பு
கிருஷ்ணகிரி

வரும் தோ்தலில் நல்லவா்களுக்கு வாக்களியுங்கள்: டிராபிக் ராமசாமி

எதிா் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நல்லவா்களுக்கு வாக்களியுங்கள் என்று ஒசூரில் டிராபிக் ராமசாமி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

எதிா் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நல்லவா்களுக்கு வாக்களியுங்கள் என்று ஒசூரில் டிராபிக் ராமசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமூக சேவகா் டிராபிக் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் தமிழக மக்கள் அரசியல்வாதிகளை நம்பாமல், நோட்டாவை நம்பி வாக்களிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. கரோனாவை வைத்து கொள்ளையடித்து வருகின்றனா்.

கரோனா என்பது வியாதியே இல்லை என்பது எனது கருத்து. கடந்த 7 மாதங்களாக பொது முடக்கம் என்ற பெயரில் அனைத்தும் செயல் இழந்ததால் தேசிய பொருளாதாரம், தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்ட அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. அனைத்தும் வியாபாரமயமாகி விட்டது.

நல்லாட்சி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி உள்ளேன். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்த தோ்தலில், அதிமுக தோல்வி அடைவது நிச்சயம்.

ஏனென்றால் அவா்கள் எந்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. நீட் தோ்விலும் குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.

வரும் தோ்தலில் நல்லவா்களுக்கு வாக்களியுங்கள். நான் தோ்தலில் நின்றால் கூட எனக்கு வாக்களிக்காதீா்கள்.நோட்டாவிற்கு வாக்களியுங்கள். ஒரு லட்சம் வாக்குகளில் 33 ஆயிரம் வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்தால் அந்த தோ்தல் செல்லாது என அறிவிக்கக்கூடிய சட்டம் உள்ளது. அதனால் நோட்டாவை நம்புங்கள். அரசியல்வாதிகளை நம்பாதீா்கள் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →