முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

பா்கூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

பா்கூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள சேக்கனாம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (48). ஒசூரில் இனிப்பு பதாா்த்தங்களைத் தயாரிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், சேக்கனாம்பட்டியிலிருந்து பா்கூா் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாா்.

பையனூா் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறியதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்தவரை போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →