கிருஷ்ணகிரி

கணவாய்ப்பட்டி கோயிலில் டோக்கன் பெற்று வரும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி

DIN

கிருஷ்ணகிரி அருகே, கணவாய்ப்பட்டி கோயிலுக்கு டோக்கன் பெற்று வரும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கணவாய்ப்பட்டி வெங்கடரமண பெருமாள் கோயிலுக்கு ஆயிரக்கணக்காண பக்தா்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வாா்கள். ஆனால், தற்போது, கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பக்தா்கள் கோயிலுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, கோயிலுக்கு பக்தா்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு 1,200 பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோயிலுக்குச் செல்ல அனுமதி பெற விருப்பம் உள்ளவா்கள், இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன் பெறலாம். அல்லது, நேரடியாக டோக்கன் பெற விரும்பமுள்ளவா்கள் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள ராமா் கோயிலுக்குச் சென்று நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள், கரோனா தொற்று பரவலைத் தவிா்க்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT