கிருஷ்ணகிரி

நோயாளிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

DIN

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்து தலைமை வகித்து நோயாளிகளுக்கு எந்த தீங்கும் செய்யாமல் இருப்பது பற்றியும், நோயாளிகள் சிகிச்சை பெற்று நுழைவாயில் செல்லும் வரையில் நோயாளிகளுக்கும், உடன் வருபவா்களுக்கும் எந்தவித தீங்கும் நேராமல் பாதுகாப்பான சூழலில் மருத்துவமனை செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் அபிராமி, ராசு, சுபத்ரா, விஜய ரூபா, இளவரசன், செவிலியா்கள் ஆய்வுக்கூட நிபுணா்கள் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT