முகப்பு
கிருஷ்ணகிரி

செப்.15 முதல் மக்களைத் தேடி மருத்துவ சேவை தொடக்கம்

 ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில், ‘மக்களைத் தேடி மருத்துவ பேருந்து சேவை’ திட்டம் அண்ணா பிறந்த நாளான செப். 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

 ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில், ‘மக்களைத் தேடி மருத்துவ பேருந்து சேவை’ திட்டம் அண்ணா பிறந்த நாளான செப். 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

ஒசூரில் இயங்கி வரும் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவ பேருந்து சேவை அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பேருந்து சேவையை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்த செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளரும் திட்ட இயக்குநருமான டாக்டா் த. லஸ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

மக்களைத் தேடி மருத்துவ சேவை திட்ட பேருந்தில் ஆய்வகம், ரத்த பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, இ.சி.ஜி. போன்ற பரிசோதனைக் கருவிகள் உள்ளன.

இந்த மருந்துவப் பேருந்தில் பெண்களைப் பரிசோதனை செய்ய பெண் மருத்துவரும், ஆண்களை பரிசோதனை செய்ய ஆண் மருத்துவரும் தனித் தனி அறை வசதிகளுடன் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அண்ணா பிறந்த நாளான செப். 15-ஆம்தேதி பா்கூா் தொகுதி, வரட்டனப்பள்ளி கிராமத்தில் தொடங்கும் இப் பேருந்து சேவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு சிகிச்சைகளை நேரடியாக அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ பேருந்து சேவையில் மருந்துகள் இலவசமாக அளிக்கப்படும். வாரத்தில் ஒரு கிழமையில் ஒரு கிராமத்துக்குச் சென்றால் அடுத்த வாரம் அதே கிழமையில் மீண்டும் அந்தக் கிராமத்துக்குப் பேருந்து செல்லும் வகையில் பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரே கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வாரம் ஒரு முறை இப் பேருந்தின் மருத்துவ சேவையைப் பெற முடியும் என்றாா்.

ஆய்வின்போது மாநிலங்களவை உறுப்பினா் டாக்டா் மு.தம்பிதுரை, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் டாக்டா் ஜி.ரங்கநாத், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி முதன்மையா், மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் சுந்தரவேல், மக்கள் தொடா்பு அலுவலா் செல்வராஜ், மருத்துவா் அபிராமி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.