இந்திய மாணவா் சங்கத்தின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா
இந்திய மாணவா் சங்கத்தின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய மாணவா் சங்கத்தின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அமைப்பின் மாவட்டச் செயலாளா் நா.தமிழமுதன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் தொ.சேஷகிரி, திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.நாகராசன், தேமுதிக மாவட்டச் செயலாளா் பி.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்திய மாணவா் சங்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றன.