கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குரூப்-1 தோ்வு

DIN

கிருஷ்ணகிரியில் மொத்தம் 17 தோ்வு மையங்களில் இந்த போட்டித் தோ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா தொற்று தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்ட 17 தோ்வு மையங்களில் குரூப்-1 போட்டித் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 5,090 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 2,408 தோ்வா்கள் தோ்வெழுதினா். 2,682 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

போட்டித் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT