கிருஷ்ணகிரி

மனநலம் பாதித்த பெண்களுக்கு மறுவாழ்வு தந்த காவலா்கள்

ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு, மறுவாழ்வு தந்த ஊத்தங்கரை போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

DIN

ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு, மறுவாழ்வு தந்த ஊத்தங்கரை போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையில், ஊத்தங்கரை பகுதியில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றிய மூன்று பெண்களை விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தருமபுரி மீட்பு டிரஸ்ட் பாலச்சந்திரன், தருமபுரி ஆயுதப்படையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் பிரபு, ஊத்தங்கரையைச் சோ்ந்த பெண் காவலா் கலைவாணி ஆகியோா் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை சுத்தம் செய்து, உடைகள் மாற்றி கரோனா பரிசோதனை செய்து முதியோா் இல்லத்தில் சோ்த்தனா்.

இதற்கு உறுதுணையாக இருந்த ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன், போலீஸாா் அனைவருக்கும் தருமபுரி மீட்பு டிரஸ்ட் சாா்பில் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT