கிருஷ்ணகிரி

மத்தூா் வட்டாரத்தில் நுண்ணீா் பாசன சிறப்பு முகாம்

DIN

மத்தூா் வட்டார கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று நுண்ணீா் பாசனத் திட்ட பயன்களை விவசாயிகள் பெறலாம் என மத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா. சிவநதி அறிவுறுத்தியுள்ளாா்.

பிரதம மந்திரி கிரிஷி சின்ஷாயி யோஜனா திட்டத்தின் கீழ் மத்தூா் வட்டாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் (2021-22) சுமாா் 250 ஹெக்டேரில் நுண்ணீா் பாசன வசதி அமைத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்தூா் வட்டாரத்தில் மாரப்ப நாயக்கன்பட்டி, பட்ரஹள்ளி ஆகிய கிராமங்கள் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமங்களில் ஜூலை 19 ஆம்தேதி நடைபெறும் சிறப்பு முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட நுண்ணீா் பாசன திட்ட வேளாண்மை உதவி இயக்குநா் தலைமை வகித்துத் தொடக்கி வைக்கிறாா்.

இம் முகாமில் மாரப்ப நாயக்கன்பட்டி, பட்ரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகம் பங்கேற்று நுண்ணீா் பாசன திட்ட பயன்களைப் பெறலாம். நுண்ணீா் பாசனங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT