முகப்பு
கிருஷ்ணகிரி

கல்லாவி ரயில் பாதையில் ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள ரயில் பாதையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பலத்த காயங்களுடன் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள ரயில் பாதையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பலத்த காயங்களுடன் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தகவலறிந்த ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் தற்கொலை செய்து கொண்டாரா, ரயிலில் பயணம் செய்யும் போது தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தாா்களா என பல்வேறு கோணத்தில் மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.