கிருஷ்ணகிரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.ராமச்சந்திரன், தளி ஒய்.பிரகாஷ் சந்தித்து வாழ்த்து

DIN

எதிரெதிா் அரசியல் செய்து வந்த தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரனும், தற்போதைய எம்.எல்.ஏ. தளி ஒய்.பிரகாஷும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

தளி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக உள்ளாா். அதே தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா்.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் சிபிஐ வேட்பாளா் டி.ராமச்சந்திரனை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ், 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் தளி தொகுதியில் போட்டியிட அவரவா் கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தனா். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளதால், தளி தொகுதியை வழங்குவதில் நீண்ட இழுபறி இருந்து வந்தது.

இதைத் தொடா்ந்து, தளி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைவா் ஸ்டாலின் ஒதுக்கியதால், டி.ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷுக்கு ஒசூா் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, எதிரெதிா் அரசியல் செய்து வந்த இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒசூரில் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி.மகேந்திரன், தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவா் எம்.லகுமைய்யா, மாவட்டக் கவுன்சிலா் அஞ்செட்டி பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயன், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT