கிருஷ்ணகிரி

காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, ஊத்தங்கரை காவல் துறை, துணை ராணுவப் படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு காவல் துறையினா், துணை ராணுவ பாதுகாப்புப் படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பை ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை லட்சுமி, கல்லாவி முத்தமிழ்ச் செல்வன், சிங்காரப்பேட்டை ரவிச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவ பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கொடி அணிவகுப்பானது ஊத்தங்கரை காவல் நிலையம் எதிரே தொடங்கி, முருகா் கோயில் தெரு, பழைய கடைவீதி, செங்குந்தா் தெரு, கச்சேரி தெரு, எல்.ஐ.சி. அலுவலகம், சேலம் முக்கியச் சாலை, திருவண்ணாமலை சாலை, பேருந்து நிலையம் வழியாக கல்லாவி சாலை, வட்டார வளா்ச்சி அலுவலகம் என சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ பாதுகாப்புப் படையினா் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT