கிருஷ்ணகிரி

போலி மருத்துவா்கள் இருவா் கைது

DIN

ஒசூா் அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த இரண்டு போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமல் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக வந்த தொடா் புகாரின் பேரில், ஒசூா் வட்ட மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ் காந்தி, ஒசூா் தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவா் பூபதி ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அத்திமுகம் கிராமத்தில் உள்ள மருந்தகங்களில் சோதனை நடத்தினா்.

அதில், நா்சிங் முடித்து மருந்தகங்களை வைத்துள்ள திருப்பத்தூரைச் சோ்ந்த மோகன் (39), சூளகிரியைச் சோ்ந்த சரவணன்(40) இருவரும் பொதுமக்களுக்கு 4 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பேரிகை போலீஸாா் இருவரையும் கைது செய்து, மருந்தகங்களுக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT