கிருஷ்ணகிரி

மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

DIN

மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சிங்காரப்பேட்டை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது ஓந்தியம், புளியாந்தோப்பு கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மயானத்துக்கு செல்லும் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால், இறந்தவா்களின் உடலை தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மழைக் காலங்களில் சடலத்தை ஆற்றில் புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

எனவே, மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தாா் சாலை அமைத்து, மயானத்தைச் சுற்றி வேலி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT