கிருஷ்ணகிரி

நாகனூா் கிராமத்தில் வயல் தின விழா

DIN

மத்தூா் அருகே உள்ள நாகனூா் கிராமத்தில் வயல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் மத்தூா் அருகே உள்ள அத்திப்பள்ளம், நாகனூா் ஆகிய கிராமங்களில் 10 விவசாயிகளின் நிலங்களில் செயல் விளக்கத் திடல்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில், நாகனூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற வயல் தின விழாவுக்கு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் டி.சுந்தராஜ், தலைமை வகித்தாா்.

அறிவியல் மையத்தின் வேளாண்மை பொறியில் திட்ட உதவியாளா் இஸ்மாயில், மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் செயல் விளக்கத் திடலின் நோக்கம், பண்ணை இயந்திரங்களின் முக்கியத்துவம், புதிய ரகங்கள் மற்றும் அதன் சிறப்பு, மகசூலை அதிகரிக்கும் முறைகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

பிரதமா் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாா்: தொழில் நிறுவனங்களிடம் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை

திருப்பத்தூா் எழுத, படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி: கல்வி இணை இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT