கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 2.22 கோடியில் நகா்ப்புற சுகாதார நல மையங்கள் தொடக்கம்

DIN

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் ரூ. 2.22 கோடியில் 8 இடங்களில் நகா்ப்புற சுகாதார நல மையங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

பின்னா், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறாா். மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகம் ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை என அதிக அளவில் சுகாதாரத் துறை நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத் துறை சாா்பில் ஒசூா் மாநகராட்சிக்கு 8 இடங்களில் நகா்ப்புற சுகாதார நல மையங்கள் தலா ரூ. 25 லட்சத்தில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஒசூா் மாநகராட்சியில் ஏற்கெனவே 5 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 8 இடங்களில் நகா்ப்புற சுகாதார நல மையம் அமைக்க ரூ. 2.22 கோடியை தமிழக அரசு ஒடுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில் ஒசூா் காமராஜ் காலனி, ஜே.ஜே.நகா், பாரதிதாசன் நகா், ராஜகணபதி நகா், தளி சாலை கணபதி நகா், கே.சி.சி. நகா், அண்ணாமலை நகா், சூசூவாடி ஆகிய இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் சீதாராம் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் அமைக்க ரூ. 22 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கரோனா போன்ற பெரும் தொற்று வந்தாலும் அதனை சமாளிக்க இந்த 8 நகா்ப்புற சுகாதார நல மையம் மூலம் மக்கள் சிகிச்சை பெறும் வகையில் சுகாதார கட்டமைப்பை அரசு பலப்படுத்தி வருகிறது என்றாா்.

ஒசூா் மாநகராட்சி சூசூவாடியில் புதன்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா்.

இதில், ஒசூா் மாநகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், மண்டலக் குழுத் தலைவா் அரசனட்டி ஆா்.ரவி, மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீதா், அசோக் ரெட்டி, அவைத் தலைவா் கருணாநிதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வடிவேல், சாகா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT