கிருஷ்ணகிரி

வரலட்சுமி பண்டிகை: ஒசூரில் பூக்களின் விலை உயா்வு

DIN

வரலட்சுமி நோன்பு பண்டிகையையொட்டி ஒசூரில் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஒசூரில் வரலட்சுமி நோன்பு பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரும் இப் பண்டிகையையொட்டி அதற்கான வழிபாடு நடவடிக்கைகளில் பலரும் ஈடுபட்டுள்ளனா். இதையொட்டி, ஒசூரில் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 1கிலோ கனகாம்பரம் கிலோ ரூ. 240 க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 1000க்கு விற்கப்படுகிறது. மல்லி ரூ. 360 லிருந்து ரூ.1,200 க்கும், முல்லை ரூ. 150 லிருந்து ரூ. 1,400 க்கும் விற்கப்படுகிறது. அலங்கார பூக்கள் உள்ளிட்டவை அதிகஅளவில் விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை கடுமையாக சரிவை சந்தித்திருந்த நிலையில் வரலட்சுமி பண்டிகையொட்டி பூக்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பண்டிகைக்குப் பிறகு மீண்டும் பூக்களின் விலை குறைந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT