கிருஷ்ணகிரி

வீடுகளில் புகுந்த மழைநீா்:பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கொல்லப்பட்டியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி மன்றத் தலைவரிடம் பல முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வியாழக்கிழமை ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு சென்ற வட்டாட்சியா் கோவிந்தராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின், காவல் ஆய்வாளா் பாா்த்திபன் ஆகியோா் பொதுமக்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை தனியாா் திருமண மண்டபத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT