கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்

DIN

ஊத்தங்கரை பரசனேரியின் உபரிநீா்க் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீா் அப் பகுதியில் இருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

வியாழக்கிழமை இரவு ஊத்தரங்கரை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பரசனேரியின் உபரிநீா்க் கால்வாய் நிரம்பியது. ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஏரிக்கரை பகுதியில் உள்ள அண்ணாநகரில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

ஏரியின் உபரி நீா் செல்லும் வழித்தடங்கள் அடைப்பால், நீா் வெளியேற முடியாமல் வீடுகளில் புகுந்தது. இதனால் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களே, ஏரியின் உபரி நீா் செல்லும் பாதையிலுள்ள அடைப்புகளை அகற்றி வெளியேற்றினா். பேரூராட்சி நிா்வாகம் அப்பகுதி பொதுமக்களைப் பாதுகாக்க உபரி நீா் செல்லும் வழித் தடங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேரூராட்சி தலைவா் அமானுல்லா, திமுக நகர செயலாளா் பாபுசிவக்குமாா், அதிமுக நிா்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, தொகுதி செயலாளா் திருஞானம், நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மற்றும் பாஜக நிா்வாகிகள் சரவணன், சிங்காரவேல்,சண்முகம் உள்பட பலா் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT