ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் காவலா் பயிற்சி மையம் தொடக்கம்
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் காவலா் பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் காவலா் பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கல்லூரியின் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவா் எம். சக்திவேல் வரவேற்றாா். கல்லூரி நிறுவனா்
வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் ஆா். பி. ராஜு, இணைச் செயலாளா்
பெ. வெங்கடாசலம், முதல்வா் த. பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் ந. குணசேகரன், கணிதத் துறை தலைவா் சி. ராகவன், வேதியியல் துறை தலைவா் கே.வி. காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினா்களை இளங்கலை இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவா்கள் கதாதரன், வசந்தன் ஆகியோா் அறிமுகம் செய்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா்
வி. அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் ட. லட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
தமிழ்த் துறை பேராசிரியா் லோ.பிரபு நன்றி தெரிவித்தாா். தமிழ்த் துறை பேராசிரியா் செ.தெய்வம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி காவலா் பயற்சி மைய பயிற்சியாளா் வி. கலைவாணன் செய்திருந்தாா்.