கிருஷ்ணகிரி

எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் 

கிருஷ்ணகிரியில் எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள தொலைத்தொடர்பு துறை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அந்தக் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன்,  மாவட்ட முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி வட்டாரத் தலைவர் சித்திக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், எரிவாயு உருளை, மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் சவ ஊர்வலம் பாடல்கள் பாடியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT