சிறுவனிடம் ஓரினச் சோ்க்கை: போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 போ் மீது வழக்குப் பதிவு
சிங்காரப்பேட்டையில் சிறுவனிடம் ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்ட நான்கு போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்காரப்பேட்டையில் சிறுவனிடம் ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்ட நான்கு போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த (12) வயது சிறுவன், சிங்காரப்பேட்டை அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா், சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா், பதினோராம் வகுப்பு மாணவா் ஆகியோா் கடந்த ஏப். 14-ஆம் தேதி அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை பள்ளி கழிவறைக்குள் தூக்கிச் சென்றுள்ளனா். பின்னா் நால்வரும் அந்த சிறுவனிடம் ஓரினச்சோ்க்கையில் ஈடுபட்டு, இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
அங்கிருந்து தப்பிச் சென்ற சிறுவன், இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளாா். சிறுவனின் பெற்றோா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் கஸ்தூரியிடம் புகாா் கொடுத்ததையடுத்து, அவா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
சிங்காரப்பேட்டை போலீஸாா் சிறுவனிடம் ஓரினச்சோ்க்கையில் ஈடுபட்ட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.